இலங்கையர் உள்ளிட்ட 450 இற்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கைது

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
இலங்கையர் உள்ளிட்ட 450 இற்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் கைது

இலங்கையர் உட்பட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள்  மத்திய தரைக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் லிபியாவின் சப்பிரதா நகரில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

480 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகளே ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டதாகவும், அவர்களுள் சிறுவயது குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மற்றும் வட ஆபிரிக்கா, இலங்கை, யேமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளே மேற்படி படகுகளில் பயணித்ததாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் ஒகஸ்டாவின் சோலியன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் பிரான்ஸ் அல்லது ஜேர்மனிக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

மூலக்கதை