ஆர்.கே.நகர் நாடார் வாக்குகள்… கனிமொழியை களமிறக்க ஒப்புக் கொண்ட ஸ்டாலின்!

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஆர்.கே.நகர் நாடார் வாக்குகள்… கனிமொழியை களமிறக்க ஒப்புக் கொண்ட ஸ்டாலின்!

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் வாக்குகளை அள்ளுவதற்காக திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்க அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மு.க. ஸ்டாலின். அதிமுக சிதறிய நிலையில் எளிதாக வெல்ல வேண்டிய கட்டயாம் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்களை ஆர்.கே.நகரில் களமிறக்கியுள்ளார் ஸ்டாலின். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் திமுக நிர்வாகிகள் ஆர்.கே.நகரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இத்தொகுதியில் 45,000 நாடார் சமூக வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளைப் பெறுவதற்காக கனிமொழியை ஸ்டாலின் களமிறக்க வேண்டும் என்பது திமுகவினரின் கோரிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் கனிமொழி வந்துதான் நாடார் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதில்லை… தென்மாவட்ட நாடார் சமூக தலைவர்களை வைத்து வாங்குகிறேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.இந்த நிலையில் திடீரென கனிமொழி பிரசாரம் செய்ய ஸ்டாலின் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம்.

தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள கனிமொழிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து கடைசிநேர பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் தமது பயண திட்டத்தை கனிமொழி வகுக்க உத்தரவிட்டுள்ளாராம். இதனால் ஆர்கே நகரில் கனிமொழி விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்கின்றன திமுக வட்டாரங்கள்.

மூலக்கதை