சிவராஜ்குமார் படங்களை கண்டு அலறும் விக்கிபீடியா..!

தினமலர்  தினமலர்
சிவராஜ்குமார் படங்களை கண்டு அலறும் விக்கிபீடியா..!

“நாடி நரம்பு, ரத்தம், சதை, புத்தி இதிலெல்லாம் சண்டை வெறி ஊறின ஒருத்தனாலதான் இப்படி பண்ணமுடியும்”னு 'பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பி டயலாக் பேசுவாரே, அதே டயலாக்கை கன்னட நடிகர் சிவாராஜ்குமாரின் சினிமா அர்ப்பணிப்புக்கு உதாரணமாக சொன்னால் பொருத்தமாக இருக்கும். கன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் ஒருவர். 51வயதான இவர் 100 படங்களை தாண்டி நடித்துவிட்டார்.

சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சிவலிங்கா' இவரது 112 படமாகும்.. இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரும் ஜுன் மாதம் 'சந்தேயல்லி நிந்த கபிரா' என்கிற படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். ஆனால் சொல்லவந்த விஷயம் அதுவல்ல.. இவரது அடுத்தடுத்த பட விபரங்களை அப்டேட் செய்யும் விக்கிபீடியாவே மிரண்டுபோகும் அளவுக்கு இதற்கு அடுத்ததாக 13 படங்கள் சிவராஜ்குமார் நடிப்பதற்காக டைட்டிலுடன் வரிசைகட்டி காத்திருக்கின்றன. கூட்டிக்கழித்து பார்த்தால் இந்த 51 வயது நாயகனிடம் இன்னும் மூன்று வருடத்துக்கு கால்ஷீட் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

மூலக்கதை