திருச்சி விமான நிலையத்துக்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயர்
02:38:21Monday2015-09-28
சென்னை: திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட மத்திய அரசு முன்வர வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். ஏற்கனவே, திருச்சி மாவட்டத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்ட போது, திருச்சி மாவட்டத்தின் பெயரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பெயர் நீக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசரின் பெயர் சூட்டப்படுவதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதை மதிக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
