வார்னர் புதிய கேப்டன்: ஆஸி., அணி அறிவிப்பு | ஜனவரி 22, 2018
மெல்போர்ன்: முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடர், அடுத்த மாதம் (பிப். 3–21) ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியிருப்பதால், ‘ரெகுலர்’ கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு, விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர், அணியை வழிநடத்த உள்ளார். சிட்னி சிக்சர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் பென் டிவார்ஷுயிஸ், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வீரர் ஷார்ட், அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர். கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட கிறிஸ் லின், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸி., அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் பின்ச், ஆஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பென் டிவார்ஷுயிஸ், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா.
ரிச்சர்ட்சன் அறிமுகம்
அடுத்த மாதம் இறுதியில் தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் மார்ச் 1–5ல் டர்பனில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் போர்ட் எலிசபெத் (மார்ச் 9–13), கேப்டவுன் (மார்ச் 22–26), ஜோகனஸ்பர்க் (மார்ச் 30 – ஏப். 3) நகரங்களில் நடக்கவுள்ளன. டெஸ்ட் தொடருக்கு முன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க லெவன் அணிகள் வரும் பிப். 22–24ல் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்துவீச்சாளர் ஜான் ஹாலந்து, வேகப்பந்துவீச்சாளர் ஜி ரிச்சர்ட்சன் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர்.
டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர் (துணைக் கேப்டன்), கேமிரான் பென்கிராப்ட், ஜாக்சன் பேர்டு, பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஹேசல்வுட், ஜான் ஹாலந்து, உஸ்மான் கவாஜா, நாதன் லியான், மிட்சல் மார்ஷ், ஷான் மார்ஷ், டிம் பெய்னே, ஜி ரிச்சர்ட்சன், மிட்சல் ஸ்டார்க்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
