தஞ்சை மாவட்டம் மணலூரில் சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு

தி இந்து  தி இந்து
தஞ்சை மாவட்டம் மணலூரில் சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம், மணலூரில் சோழர் காலத்தைச் சேர்ந்த தலையில்லாத புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தமிழ்ப் பல்கலைக்கழக கண்காணிப்பாளரும் பவுத்த ஆய்வாளருமான பா.ஜம்புலிங்கம் மற்றும் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன் ஆகி யோர் அந்தச் சிலையைக் கண்டெடுத்த னர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

‘‘மணலூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சேதுராமன் அளித்த தகவலின்பேரில், பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள கணபதி அக்ரஹாரத்தை அடுத்த மணலூரில் இந்தச் சிலை கண்டெடுக்கப்பட்டது.

அமர்ந்த நிலையில், தலைப் பகுதி இல்லாமல், வலது கை உடைந்த நிலையில் கிடைக்கப் பெற்ற அந்தச் சிலை 80 செ.மீ. உயரம் உள்ளது. சோழ நாட்டில் கண்டறியப்பட்ட பிற புத்தர் சிலைகளைப் போன்ற அமைப்பிலேயே உள்ள இந்த சிலை, கி.பி. 10- 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வையச்சேரி, சோழன்மாளிகை, கோபிநாதப் பெருமாள் கோயில், கும்பகோணம், மதகரம், மானம்பாடி, மங்கநல்லூர், முழையூர், பட்டீஸ்வரம், பெரண்டாக் கோட்டை, திருநாகேஸ்வரம், திருவலஞ்சுழி, விக்ரமம் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற புத்தர் சிலைகள் காணப்படுகின்றன.

இவற்றில் வையச்சேரி மற்றும் பெரண்டாக்கோட்டையில் புத்தரின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அய்யம்பேட்டை பள்ளி ஆசிரியர் செல்வராஜ், அய்யம்பேட்டைக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் வையச் சேரி கிராமத்தின் குளக்கரை யில் புத்தர் சிலையின் தலைப் பகுதி இருப்பதாகக் கூறி, அதன் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். அங்கு சென்று பார்த்தபோது, அந்தத் தலைப் பகுதியைக் காண முடியவில்லை.

இந்நிலையில், மணலூரில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத புத்தர் சிலை, வையச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தலைப் பகுதியுடன் பொருந்தலாம் எனக் கருத முடிகிறது. அய்யம்பேட்டையைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் இது போல காணப்படும் புத்தர் சிலைகள், இந்தப் பகுதியில் புத்த விஹாரைகள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன’’ என்றனர்.

இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டால் சோழ நாட்டில் புத்த மதத்தின் வளர்ச்சி, அதன் தாக்கம் குறித்து மேலும் அறிய லாம். பொதுமக்கள், புத்தர் சிலை களின் தலைப் பகுதிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் மேற் கண்ட ஆய்வாளர்களிடம் தெரிவிக்கலாம்.

Keywords: மணலூr, சோழர் காலm, புத்தர் சிலை, பவுத்த ஆய்வாளr, பா.ஜம்புலிங்கம்

மூலக்கதை