அரியலூர்-திருச்சி சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்த அதிகாரிகள்

  தினத்தந்தி
அரியலூர்திருச்சி சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்த அதிகாரிகள்

அரியலூர், அரியலூர் நகரில் முக்கிய சாலைகளாக செந்துறை சாலை, திருச்சி சாலை, கல்லங்குறிச்சி சாலை, ஜெயங்கொண்டம் சாலை மற்றும் பெரம்பலூர் சாலை ஆகியவை உள்ளன. இதில் திருச்சி சாலையில் தினமும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்டவை சென்று வருவதால் நகரை இணைக்கும் முக்கிய சாலைகளாக திகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், திருச்சி சாலையில் மாதா கோவில் முன்புள்ள பிரிவு பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த பள்ளத்தை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து `தினத்தந்தி' நாளிதழில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை சரிசெய்து சீரமைத்தனர். ஆனால் குறிப்பிட்ட அந்த இடத்தில் அதிகளவில் ஜல்லிக்கற்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தநிலையில் இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஜல்லிக்கற்களை விரைந்து அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மூலக்கதை