ஈரோடு - பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரெயில்

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரோடு - பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே வாராந்திர அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து செப்டம்பர் 25-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வ.எண் 16601), அடுத்த 3-வது நாள் மாலை 7 மணிக்கு பீகார் மாநிலம் ஜோக்பானியை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஜோக்பானியில் இருந்து செப்டம்பர் 28-ந் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (16602), அடுத்த 4-வது நாள் காலை 7.20 மணிக்கு ஈரோட்டினை வந்தடையும். இந்த அம்ரித் பாரத் வாராந்திர ரெயில், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நாயுடுபேட்டை, கூடூர், ஓங்கல், விஜயவாடா, கம்மம், வாராங்கல், நாக்பூர், ஜெபல்பூர் வழியாக செல்லும். இந்த அம்ரித் பாரத் வாராந்திர ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (18-ந் தேதி, வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
