ஜான்விகபூர் கதாபாத்திரம் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது- நடிகை பவித்ரா மேனன்

  தினத்தந்தி
ஜான்விகபூர் கதாபாத்திரம் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது நடிகை பவித்ரா மேனன்

துஷார் ஜலேதா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பரமசுந்தரி. இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் மலையாள பெண்ணாக நடித்திருந்தார். படத்தில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்பு பார்வையாளர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது. இது குறித்து நடிகை பவித்ரா மேனன் கூறுகையில், ‘பரமசுந்தரி படத்தில் ஜான்விகபூர் கதாபாத்திரம் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. உலகில் எந்த கதாபாத்திரத்திலும் எந்த நடிகரையும் நடிக்க வைக்கலாம். அதனால்தான் அவர்களை நடிகர்கள் என்று அழைக்கிறோம். ஆனால் குறைந்தபட்சம் ஒரு பயிற்சியாளரை தேர்வு செய்யுங்கள். கேரளாவில் நாம் அனைவரும் பாலிவுட்டை நேசிக்கிறோம். ஷாருக்கான், கரீனாகபூர் மற்றும் பிற நட்சத்திரங்கள் படங்களை பார்த்து வளர்ந்தோம். வெளிப்படையாக சொன்னால் இந்தி சினிமாவில் நுணுக்கம் பலமாக இருந்ததில்லை. 10 படங்களில் 2 படங்கள் உண்மையில் நல்லவை. மீதி 8 படங்கள் பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை மட்டுமே பூர்த்தி செய்யக் கூடியவை. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே ஜான்விகபூர் மலையாள உச்சரிப்பு குறித்து விமர்சித்த பவித்ரா மேனன் மலையாள நடிகைகளை தவறாக காட்டுவதே பாலிவுட் சினிமாவின் வேலை. ஸ்ரீதேவி மகள் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அவரது கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பவித்ராமேனன் நான் ஜான்விகபூர் மீது தொழில் பொறாமையில் சொல்லவில்லை. அவரை கேலி செய்யும் விதமாக எனது வீடியோ ஒரு போதும் இருக்கவில்லை என கூறினார்.

மூலக்கதை