பள்ளியில் 10 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன் / Bihar: 5-year-old boy shoots 10-year-old student at school

  மாலை மலர்
பள்ளியில் 10 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன் / Bihar: 5yearold boy shoots 10yearold student at school

தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்ற 5 வயது மாணவன் 3ம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனையிட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை