மோடிக்கு எதிராக கல்லூரி பேராசிரியை பிரசாரம்!

தினமலர்  தினமலர்
மோடிக்கு எதிராக கல்லூரி பேராசிரியை பிரசாரம்!

''மாஜி முதல்வரின் மகன் தொல்லை தாங்க முடியாம தவிக்கிறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''அ.தி.மு.க.,வுலயா வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''இல்ல... இன்னொரு,'மாஜி' முதல்வர் பன்னீர்செல்வம் இருக்காரே... இவரது அணி சார்புல, தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி, நிர்வாகிகளை நியமிச்சிருக்காருங்க...

''அவங்களும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, சமூக வலைதளங்கள்ல பன்னீரின் புகழ் பரப்பும் பணிகள்ல ஈடுபட்டிருக்காங்க... ஆனா, இவங்க பணிக்கு, பன்னீரின் இளைய வாரிசு இடையூறா இருக்காருங்க...

''அவர், தகவல் தொழில்நுட்ப அணிக்கு மாநில செயலராக விரும்பியிருக்காரு... ஆனா, பன்னீர் தரலையாம்... ஆனாலும், விடாப்பிடியா, ஐ.டி., அணிக்குள்ள புகுந்து, 'அப்படி பண்ணுங்க, இப்படி பண்ணுங்க'ன்னு உத்தரவு போடுறாருங்க...

''இவ்வளவுக்கும், அந்த அளவுக்கு வாரிசுக்கு தொழில்நுட்பமும் அத்துப்படியா இல்ல... இவரை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம, நிர்வாகிகள் தவிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சார் - பதிவாளர் ஆபீஸ்கள்ல, புரோக்கர்கள் இல்லாம யாரும் பத்திரம் பதிவு செய்ய முடியாத சூழல் தான் நிலவறது... வழக்கம் போல, வசூல் அதிகம் கிடைக்கற இடங்களை பிடிக்க, சார் - பதிவாளர்கள் மத்தியில கடும் போட்டி இருக்கு ஓய்...

''இவங்க, உரிய முறையில கப்பம் கட்டி தான், வசூல் இடங்களை பிடிக்கறா... இப்படியே பழகி, பழகி வசூல் இல்லாத இடங்களுக்கு, சிலர் சொந்த காரணங்களுக்காக இடமாறுதல் கேட்டாலும், கப்பம் கட்டணும்கறது விதியா போயிடுத்து ஓய்...

''குறிப்பா, பதிவு இல்லாத பணி வேணும்னு யாராவது கேட்டாலும், அதுக்கும் மேல்மட்ட அளவுல கவனிப்பை எதிர்பார்க்கறா... இதனால, வெறுத்து போன சார் - பதிவாளர்கள் பலர், விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பிச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''பாடம் எடுக்க வேண்டிய பேராசிரியை, அரசியல் பேசிட்டு இருக்காங்க வே...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருப்பூர், பல்லடம் ரோட்டில் இருக்கிற அரசு மகளிர் கல்லுாரியில ஒரு பேராசிரியை இருக்காங்க... இவங்க, வகுப்புகள்ல பாடம் நடத்துறதை விட, அரசியல் பிரசாரம் தான் பண்ணிட்டு இருக்காங்க வே...

''ஒவ்வொரு வகுப்பிலும் மாணவியரிடம், 'உங்களுக்கு பிடிச்ச கட்சி, தலைவர்கள் யார்'னு கேட்கிறாங்க... யாராவது, 'பிரதமர் மோடி தான் பிடிக்கும்'னு சொல்லிட்டா, பேராசிரியை முகம் சிவந்து போயிடுது வே...

''உடனே, 'அவர் போடுற டிரஸ் விலை என்ன தெரியுமா... அதெல்லாம் மக்களின் வரிப்பணத்துல வாங்குனதுன்னு உங்களுக்கு தெரியாதா'ன்னு மோடியை பற்றி எதிர்மறை பிரசாரம் பண்ணுதாங்க வே...

''இது சம்பந்தமா ஒரு மாணவியின் பெற்றோர், கல்லுாரி முதல்வரிடம் புகார் குடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்ல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

-''இதே, தமிழக ஆளுங்கட்சியை திட்டி பேசியிருந்தா, அடுத்த நொடியே சஸ்பெண்ட் பண்ணியிருப்பாங்க... ஆளுங்கட்சிக்கு பிடிக்காத மோடியை விமர்சனம் பண்றதால, 'பிரீயா' விட்டுட்டாங்களோ...'' என்றபடியே அந்தோணி சாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

''மாஜி முதல்வரின் மகன் தொல்லை தாங்க முடியாம தவிக்கிறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''அ.தி.மு.க.,வுலயா வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''இல்ல...

மூலக்கதை