ஓணம் பண்டிகை; கேரளாவில் 14 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு

  தினத்தந்தி
ஓணம் பண்டிகை; கேரளாவில் 14 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு

திருவனந்தபுரம், கேரள உணவு வழங்கல் துறை மந்திரி அனில் ஆலப்புழையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில் செப்டம்பர் 5-ந் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 லட்சத்து 92 ஆயிரத்து 657 மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் 10 ஆயிரத்து 634 பேருக்கு பரிசு தொகுப்பு என மொத்தம் 6 லட்சத்து 3 ஆயிரத்து 201 பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. வருகிற 18-ந் தேதி முதல் ரேஷன் கடை மூலமாக இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஒரு பரிசு தொகுப்பின் விலை ரூ.710 ஆகும். இவை இலவசமாக தனித்தனி துணிப்பைகளில் வழங்கப்படும். செப்டம்பர் 4-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.இந்த பரிசு தொகுப்பில் உப்பு, சீனி, மஞ்சள் பொடி, நெய், சிறு பயறு உள்பட 14 வகை மளிகை பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை