வாட்ஸ்அப் தளங்களில் ராணுவத்துக்கு நன்கொடை வசூலிப்பா? மத்திய அரசு மறுப்பு

  தினத்தந்தி
வாட்ஸ்அப் தளங்களில் ராணுவத்துக்கு நன்கொடை வசூலிப்பா? மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி,ராணுவத்தை நவீனப்படுத்தவும், பணியின்போது உயிர் துறக்கும் மற்றும் காயமடையும் வீரர்களுக்காகவும் நன்கொடை வசூலிப்பதாக செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளங்களில் பரவி வருகிறது. இதற்காக வங்கி கணக்கு ஒன்றும் அத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த செய்தி தவறானது என ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது. இதில் மக்கள் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்குமாறும் எச்சரித்து உள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தவும், காயமடைந்த மற்றும் உயிரிழக்கும் வீரர்களுக்கு உதவுவதற்காகவும் குறிப்பிட்ட வங்கி கணக்கு ஒன்றில் நன்கொடை வழங்குமாறு வாட்ஸ்அப் தங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. மந்திரிசபையின் முடிவு எனவும், நடிகர் அக்ஷய் குமாரின் பரிந்துரை இது என்றும் கூறப்பட்டு உள்ளது. அந்த வங்கி கணக்கு விவரங்கள் தவறானவை. இதன் மூலம் மோசடி நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் இதற்கு இரையாகாமல் இருக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

மூலக்கதை