கோல்மால் அகைன் உடன் ரோபர்ட் 2.0 போட்டியில்லை

தினமலர்  தினமலர்
கோல்மால் அகைன் உடன் ரோபர்ட் 2.0 போட்டியில்லை

கோல்மால் அகைன் படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு மாற்றப்பட்டு விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இதனால் கோல்மால் அகைன், ரோபர்ட் 2.0 படங்களுக்கு இடையே மோதல் இருக்காது என்றும் கூறப்பட்டது. தற்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2017 ம் ஆண்டு தீபாவளிக்கு கோல்மால் அகைன், ரஜினியின் ரோபர்ட் 2.0 படத்துடன் மோதல் கிடையாது என்பது உறுதி ஆகி விட்டதால் ரோபர்ட் 2.0 படத்தின் தயாரிப்பாளர் ராஜூ மகாலிங்கம், டைரக்டர் ரோஹித் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரோபர்ட் 2.0 படத்திற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் ரஜினியின் மிகப் பெரிய ரசிகர் என்பதை காட்டி உள்ளீர்கள் என தெரிவித்துள்ளார். கோல்மால் அகைன் படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மூலக்கதை