பெரிய மாலை அணிந்து மனைவியுடன் முக்கிய நாளை கொண்டாடிய ரோபோ ஷங்கர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெரிய மாலை அணிந்து மனைவியுடன் முக்கிய நாளை கொண்டாடிய ரோபோ ஷங்கர்

சென்னை: திருமண நாள் கொண்டாடிய நடிகர் ரோபோ ஷங்கருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டார் விஜய்யின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து பிரபலம் ஆனவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.

pic.twitter.com/rFdEMtY8rk

தனுஷின் மாரி படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது சூர்யாவின் எஸ்3 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி அவர் தனது திருமண நாளை கொண்டாடினார்.

திருமண நாள் அன்று தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மூலக்கதை