'பேஸ்புக்கோடு' கைக்கோர்க்கிறது 'சென்னை 28 - II'

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேஸ்புக்கோடு கைக்கோர்க்கிறது சென்னை 28  II

இதுவரை நேரலை நிகழ்ச்சிகள் பலவற்றை ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டிருப்பார்கள். ஆனால் தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 'பேஸ்புக்' நேரலை நிகழ்ச்சியை அறிமுக படுத்த இருக்கின்றனர் 'சென்னை 28 - II' அணியினர்.

'சென்னை 28 - II' படத்தின் அதிகாரபூர்வமான பேஸ்புக் பக்கத்தில், டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு இந்த நேரலை நிகழ்ச்சி, பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய தலைமை இடமான ஹைதராபாத்தில் இருந்து ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை 28 - II அணியினர் பேஸ்புக்கில் 'புரோப்பைல் பிரேம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

"இந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு போட்டியும் நடத்தப்பட்டது.. அந்த போட்டியில் வெற்றி பெற்று, குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ரசிகர்கள் (கிரிக்கெட் ஆட்டத்தில் இருக்கும் 11 விளையாட்டு வீரர்கள் போல்), இந்த நேரலை நிகழ்ச்சியில் எங்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர்... டிசம்பர் 1 ஆம் தேதி மாலை நான்கு மணி முதல் எங்களின் ஆட்டம் தொடர இருக்கிறது," என்கிறார் இயக்குநர் வெங்ட் பிரபு.

மூலக்கதை