வருமான வரி திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கிடையாது - மத்திய...

தினத்தந்தி  தினத்தந்தி
வருமான வரி திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கிடையாது  மத்திய...

புதுடெல்லி

வீடுகளில் நகைகள் வைத்திருப்பது தொடரபாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த  தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வருமான வரி மசோதாவில் தங்க நகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, வருமான வரிச்சட்டத்தின் கீழ் 1916-ல் உள்ள நடைமுறையே தொடரும். வருமானத்திற்கு கூடுதலான நகைகளுக்கு வரி விதிப்பதில் பழைய நடைமுறையே பின்பற்றபடும். பழைய சட்டத்தின் படி திருமணமான பெண் 500 கிராம் நகைவைத்து இருக்கலாம்.திருமணமாகாத பெண் 250 கிராம் நகை வைத்து இருக்கலாம்.  ஆண்கள் 100 கிராம் நகைகள் வரை வைத்து இருக்காலாம் என பழைய சட்டத்தில் உள்ளது.

பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை தொடரும் நேரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. வருமான வரி சோதனையின் போது கூடுதலான தங்கத்திற்கு 60 சதவீத வரி விதிக்கப்படும்.வருமான வரியில் பிடிபடும் தங்கத்திற்கு 30 சதவீத வரி என்பது ஏற்கனவே இருந்தது.

மூலக்கதை