புயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு

சென்னை: புயல், மழை காரணமாக நாளை தொடங்கவிருந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழா ஒத்தி வை்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழாக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக்குழு கவிஞர் இன்குலாப் அவர்களின் இழப்பிற்கு தனது ஆழந்த இரங்கலையும்.. செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழா நாளை 2.12.16 மற்றும் நாளை மறுநாள் 3.12.16 நடைபெறக்கூடிய சூழலில் 'நடா' புயல் உருவாகி சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடும் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசும், வானிலை ஆய்வுமையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

இச்சூழலில் மக்கள் பங்கேற்பில்லாமல் நடத்துவது என்பது யாருக்கும் பயன் தராததோடு மட்டுமில்லாமல் விழாவும் சிறப்பிக்காது..

எனவே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு துவக்க விழாவின ஒத்தி வைப்பதாக விழாக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்னும் ஒரு சில தினங்களுக்குள் தொடக்க விழாவினை எந்த தேதியில் நடத்துவதென்பதை தெரிவிக்கிறோம்.

-இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை