பிள்ளையின் முன்னால் இளம்பெண் படுகொலை - 28 கத்திக்குத்துக்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிள்ளையின் முன்னால் இளம்பெண் படுகொலை  28 கத்திக்குத்துக்கள்!!

அவரது பிள்ளையின் முன்னால் வைத்து ஒரு 22 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் Agen நகரத்திலிருந்து நாற்பது கிலோமீற்றரில் இருக்கும் Fumel (Lot-et- Garonne)  இல் செவ்வாய் மாலை நடந்துள்ளது.
 
சிந்தி (Cyndi S) எனப்படும 22 வயது இளம்பெண், இரண்டு வயதுகளாகும் தனது மகனுடனும், ஒரு நண்பனுடனும், நகர மத்தியிலுள்ள ஒரு அருந்தகத்தில் இருந்து கோப்பி அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். 
 
 
திடீரென அங்கு வந்த இவரின் முன்னாள் துணைவன், வலோந்தன் (Valentin H.) தான் கொண்டு வந்த பெரிய சமையலறைக் கத்தியால் சரமாரியாகக் குத்த ஆரம்பித்துள்ளார். அதனை அங்கிருந்த இந்தப் பெண்ணின் தடுக்க முற்ப்பட்டுச் சில கத்திக் குத்துகளிற்கு இலக்காகியிருந்தாலும் இந்தப் படுகொலையைத் தடுக்க முடியவில்லை. 28 கத்திக் குத்துகளுடன் சிந்தி சாவடைந்து வீழந்துள்ளார். குழந்தை கதறக் கதற தந்தையினால் தாய் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
உடனடியாகக் கத்தியை எறிந்து விட்டு 23 வயதுடைய வலோந்தன் தப்பியோடி உள்ளார். ஆனால் ஜோந்தார்மினர் இவரை செவ்வாய்க்கிழமை மாலை 20h30 இற்குக் கைது செய்திருந்தனர். முதல் நாள் விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டவர், நேற்று அவர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து நாற்பது கிலோமீற்றர்களில் வைத்து மீண்டும் ஜோந்தார்மினர் இவரைக் கைது செய்துள்ளனர்.
 
சிந்தியின் மீது அடிக்கடி வலோந்தன் வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், இதனாலேயே மிகவும் வலியுடன், சில மாதங்களிற்கு முன்னர் இவர்கள் பிரிந்தார்கள் எனவும், அயலவர்கள் தெரிவித்ததாக, ஜோந்தர்மினர் இன்று தெரிவித்துள்ளனர்.
 

மூலக்கதை