அம்மணிக்கு அரசியல் ஆசை வந்துடுச்சோ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்மணிக்கு அரசியல் ஆசை வந்துடுச்சோ?

பெரிய நம்பர் நடிகையின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக பல மாற்றங்கள். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வரும் ரெகுலர் வாய்ப்புகளை மறுத்துவிட்டு லீட் ரோல்களுக்கு மட்டும் தான் ஓகே சொல்கிறார்.

தனக்கு முக்கியத்துவம் தரும் நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதற்காகவே சொந்த கம்பெனி படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதோடு தனது கேரக்டர்களிலும் முக்கியத்துவம் செலுத்துகிறார்.

கலெக்டராக நடிக்கும் படத்தின் கேரக்டர் மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாம் நடிகை அரசியலுக்கு அடியெடுத்து வைப்பதற்கான அடித்தளம் என்கிறார்கள்.

சென்ற ஆண்டு ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு தனக்குத் திரண்ட கூட்டத்தைப் பார்த்து இந்த அரசியல் ஆசை உருவாகி இருக்கலாம். ஆனா கூட்டம்லாம் ஓட்டா மாறணுமே?

மூலக்கதை