கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு

ஜூன் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விக்டோரியா ஸ்டேடிலுள்ள தேசிய நூலக வாரியத்தின் பாசிபிலிட்டி அறையில் கலா மஞ்சரி நிறுவனர் திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு வெளியீடு கண்டது.

பாரதிதாசனாரின் சில பாடல்களை உள்ளடக்கிய ‘ அமுதே தமிழே’எனும் இந்த இசை மற்றும் ஒளிவட்டினை சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஸ்வ சதாசிவன் அவர்கள் வெளியிட்டார்.

இந்த இசை மற்றும் ஒளிவட்டிற்கு முனைவர் திரு. கே. சிவராஜ் அவர்கள் இசை வடிவம் கொடுத்திருக்கிறார். இதில் உள்ள ஆறு பாடல்களுக்கு தமிழ் விளக்கங்களை முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றார்.
ஆங்கிலத்தில் ஐஏஎஸ் இதுகீரி திரு எம். ராஜா ராம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கின்றார். இந்த ஆறு பாடல்களையும் மிக அழகாக திரு. நட்சத்திரம் பிரேம் குமார் அவர்கள் வீடியோ (ஒளி) அமைப்பு செய்து இருக்கிறார்.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தினகரன் அவர்கள் தமிழ்ச் சான்றோர் முனைவர் சுப திண்ணப்பன் அவர்கள் முன்னாள் சிங்கப்பூர் தூதர் திரு. கேசவபானி அவர்கள் மற்றும் பல சமூக அமைப்புகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அமுதே தமிழே இசை வட்டு தொடர்பாக பேச்சு, கட்டுரை மற்றும் பாட்டு போட்டிகள் கலா மஞ்சரியால் பாரதிதாசனாரைப் பற்றி நடத்தப்பட்டது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கு பெற்றனர். 120 பேர் பங்குபெற்றனர்.

தமிழ் மொழி வளர்ச்சி குழு இதற்கு ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர் ஒருவருக்கு 10 வெள்ளி என்று நிர்ணயம் செய்யப்பட்டு அதில் கிடைக்கப்பெற்ற 1200 வெள்ளியையும் இந்த ஒளிவட்டின் மூலம் திரட்டப்பட்ட 600 வெள்ளியையும் இணைத்து கலா மஞ்சரி 7000 வெள்ளியை சிண்டாவிற்கு நண்கொடையாக வழங்கியது.

சங்கீத பவன் மற்றும் ஐயங்கார் பேக்கரி அவர்களுடைய சுவையான உணவுகளை வழங்கியது சிறப்பூட்டியது.
ஏறத்தாழ 150 பேர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்தது.

மூலக்கதை