செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது செயற்கை சூரியன் அணுக்கரு இணைப்பில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கொரிய இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்யூஷன் எனர்ஜியில் உள்ள கெஸ்டாரில் (KSTAR) அணுக்கரு இணைவு 48 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை உருவாக்கியுள்ளது.இ து சூரியனின் மையப்பகுதியை விட ஏழு மடங்கு வெப்பமானது.
2026-ஆம் ஆண்டுக்குள் 300 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி வெப்பநிலையை உருவாக்குவதே இலக்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.