த்ரிஷாவைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

தினமலர்  தினமலர்
த்ரிஷாவைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

பொன்னியின் செல்வன், லியோ படங்களில் நடித்த பிறகு அரை டஜன் புதிய படங்களில் கமிட்டாகி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் த்ரிஷா. அதோடு, 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த த்ரிஷா புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாயாக உயர்த்திருக்கிறார். இப்படி த்ரிஷா சம்பளத்தை உயர்த்தி விட்டதை அடுத்து நயன்தாராவும் புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் படம் வெற்றி பெற்றபோதும் தமிழில் நயன்தாரா நடித்த இறைவன், அன்னப்பூரணி போன்ற படங்கள் தோல்வி அடைந்தன. அதையடுத்து மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் திடுதிப்பென்று 12 கோடியாக சம்பளத்தை அவர் உயர்த்தி விட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை