இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் விலகினார்.

 

இசை அமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.

 

ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தனியார் நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

 

இந்நிலையில், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அமர்வில்

இன்று விசாரணைக்கு வந்தபோது, இதிலிருந்து விலகுவதாக நீதிபதி சுப்ரமணியம் தெரிவித்தார்.

 

மேலும், இவ்வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மூலக்கதை