தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுவாரஸ்ய விவரம்

தினமலர்  தினமலர்
தி.மு.க.,  அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுவாரஸ்ய விவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தி.மு.க., வேட்பாளர்கள்:

தொகுதி வேட்பாளர் பெயர் சீட் கிடைக்க காரணம்

வட சென்னை கலாநிதி வீராசாமி சிட்டிங் எம்.பி.,. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன்.

தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் சிட்டிங் எம்.பி.,. அமைச்சர் தங்கம் தென்னரசு பரிந்துரை

மத்திய சென்னை தயாநிதி மாறன் சிட்டிங் எம்.பி.,. முரசொலி மாறன் மகன்.

ஸ்ரீபெரும்புதுார் டி.ஆர்.பாலு சிட்டிங் எம்.பி.; கடைசி தேர்தல் எனக் கூறி வேண்டிக் கொண்டதால், ஸ்டாலின் இரக்கம் காட்டி உள்ளார்.

காஞ்சிபுரம், தனி செல்வம் சிட்டிங் எம்.பி. தனி தொகுதி என்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு.

அரக்கோணம் ஜெகத்ரட்சகன் சிட்டிங் எம்.பி.,. வசதியானவர்.

வேலுார் கதிர் ஆனந்த் சிட்டிங் எம்.பி., அமைச்சர் துரைமுருகன் மகன்.

திருவண்ணாமலை அண்ணாதுரை சிட்டிங் எம்.பி.,. அமைச்சர் வேலு மகன் கம்பன் தொகுதியை கேட்காததால், இவருக்கு மீண்டும் யோகம்.

நீலகிரி, தனி ராஜா சிட்டிங் எம்.பி.,. கட்சி துணை பொதுச் செயலர்.

துாத்துக்குடி கனிமொழி கருணாநிதியின் மகள். சிட்டிங் எம்.பி.,. கட்சி துணை பொதுச் செயலர்

* புதுமுகங்கள்

தர்மபுரி மணி நான்கு சட்டசபை தேர்தலில், போட்டியிட வாய்ப்பு கேட்டும் மறுக்கப்பட்டது. இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆரணி தரணிவேந்தன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர். அவருக்கு கீழ் நான்கு சட்டசபை தொகுதிகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி மலையரசன் அமைச்சர் வேலுவின் நம்பிக்கை பெற்ற, மாவட்ட செயலர் வசந்த கார்த்திகேயன் ஆதரவாளர்.

ஈரோடு பிரகாஷ் மாநில இளைஞர் அணி துணை செயலர். இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

கோவை கணபதி ராஜ்குமார் விருப்ப மனு கொடுத்தவர்கள் பட்டியலில், போட்டியிட அதிக ஆர்வம் காட்டியவர்.

பொள்ளாச்சி ஈஸ்வரசாமி ஒன்றிய செயலர். சரியான வேட்பாளர் என சர்வே 'டீம்' பரிந்துரை.

பெரம்பலுார் அருண்நேரு மூத்த அமைச்சர் நேருவின் மகன்.

தஞ்சாவூர் முரசொலி பாரம்பரிய தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

சேலம் செல்வகணபதி கட்சி தலைமையிடம் நெருக்கம். வழக்கு காரணமாக, எம்.பி., பதவி இழந்தவர். வழக்கில் வெற்றி பெற்றதால், அவருக்கு வாய்ப்பு.

தேனி தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க.,விலிருந்து இணைந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து தோல்வி அடைந்ததால், மீண்டும் வாய்ப்பு.

சீட் கிடைக்காத 'சிட்டிங் எம்.பி.,க்கள்'

தொகுதி பெயர் சீட் கிடைக்காதற்கான காரணம்

திருநெல்வேலி ஞான திரவியம் மதபோதகரை தாக்கிய விவகாரம்; கல்குவாரி பிரச்னை; தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாதது.

மயிலாடுதுறை ராமலிங்கம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

திண்டுக்கல் வேலுசாமி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தர்மபுரி செந்தில்குமார் ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி, கட்சிக்கு நெருக்கடி உருவாக்கியது.

கடலுார் ரமேஷ் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., 21 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில் மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளனர். புதுமுகங்கள் 11 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பி.,க்களில், 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் வன்னியர்; நான்கு பேர் முக்குலத்தோர்; நான்கு பேர் கொங்கு வேளாள கவுண்டர்; இரண்டு பேர் இசை வேளாளர்; ஒருவர் நாயுடு; மூன்று பட்டியலினத்தவர்; ஒருவர் முதலியார்; ஒருவர் உடையார்; ஒருவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


தொகுதி பெயர் சீட் கிடைக்க காரணம்

*வடசென்னை மனோ த.மா.கா.,விலிருந்து வந்தவர். இரண்டு முறை காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இவரை பொதுச் செயலர் பழனிசாமியே தேர்வு செய்துள்ளார்.

* தென் சென்னை ஜெயவர்ததன் இத்தொகுதி முன்னாள் எம்.பி. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மகன்.

* மதுரை சரவணன் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,. அ.தி.மு.க.,வுக்கு வந்த பிறகு, கட்சியின் மருத்துவ அணி இணை செயலராக இருப்பதுடன், பொதுச் செயலர் பழனிசாமிக்கு நெருக்கமாக உள்ளார். மதுரை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், அகமுடையார் சமூகத்திற்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது. அந்த குறையை போக்கவும், இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* ஈரோடு ஆற்றல் அசோக்குமார் இவரது தாயார் முன்னாள் எம்.பி., கே.எஸ்.சவுந்தரம். அப்போது அ.தி.மு.க., தற்போது பா.ஜ.,வில் உள்ளார். இவரது மாமியார் மொடக்குறிச்சி பா.ஜ., எம்.எல்.ஏ.,சரஸ்வதி. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவர்.

* ராமநாதபுரம் ஜெயபெருமாள் 2011ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.,வில் மாவட்ட பொருளாளராக இருந்தார். தற்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார்.

* கிருஷ்ணகிரி ஜெயப்பிரகாஷ் வன்னியர் ஓட்டுகளை பெறும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்ய தயாராக இருப்பதாக, கட்சி தலைமையிடம் கொடுத்த வாக்குறுதிதான், 'சீட்' பெற்று கொடுத்துள்ளது. முனுசாமியின் தீவிர ஆதரவாளர்.

* சேலம் விக்னேஷ் தந்தை கட்டட ஒப்பந்ததாரர். பணம் செலவு செய்யக்கூடியவர். திண்டமங்கலத்தில், அ.தி.மு.க., சார்பில் நடந்த பொங்கல் விழாவுக்கு, 45 லட்சம் ரூபாய் செலவு செய்து நிகழ்ச்சியை நடத்தினார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணியின் சகோதரர், பரமசிவத்தின் மகளை திருமணம் செய்துள்ளார்.

* நாமக்கல் தமிழ் மணி லோக்சபா தேர்தலில் தாராளமாக செலவு செய்வேன் என, உறுதி அளித்ததாலும், பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர் என்பதாலும் இவருக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.

* சிதம்பரம் சந்திரகாசன் உதவி வேளாண் அலுவலராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். பெரம்பலுார் மாவட்ட இலக்கிய அணி செயலர்.

* காஞ்சிபுரம், தனி ராஜசேகர் ஜெயலலிதா பேரவை துணை செயலர். விருப்ப மனு கொடுத்தவர்களில், அனைவரையும் விட அதிகம் செலவிடுவேன் என உறுதி அளித்ததால், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* அரக்கோணம் விஜயன் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலர்.

* ஆரணி கஜேந்திரன் -ஆரணி தெற்கு ஒன்றிய செயலர்.

* விழுப்புரம், தனி பாக்யராஜ் மாவட்ட மாணவர் அணி செயலர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்.

* கரூர் தங்கவேல் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர்.

* நாகப்பட்டினம், தனி சுர்சித் சங்கர் ஜெயலலிதா பேரவை துணை செயலர். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர்.* தேனி நாராயணசாமி தேனி கிழக்கு ஒன்றிய செயலர்

தி.மு.க., வேட்பாளர்கள்:தொகுதி வேட்பாளர் பெயர் சீட் கிடைக்க காரணம்வட சென்னை கலாநிதி வீராசாமி சிட்டிங் எம்.பி.,. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன். தென் சென்னை தமிழச்சி

மூலக்கதை