'2011 வரலாறை மீண்டும் படைக்க உள்ளோம்'

தினமலர்  தினமலர்
2011 வரலாறை மீண்டும் படைக்க உள்ளோம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:''அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் 2011 வரலாறை, மீண்டும் வரும் தேர்தலில் படைக்க உள்ளோம்,'' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.

அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பின் பிரேமலதா அளித்த பேட்டி:


கடந்த 2011ல் ஏற்பட்ட, வெற்றி கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது.

அந்த வெற்றி மீண்டும் நிச்சயமாக லோக்சபா தேர்தலிலும், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தொடரும். இது வெற்றிக் கூட்டணியாக அமையும். இது ராசியான கூட்டணி. வெற்றி கூட்டணி.

இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை:''அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் 2011 வரலாறை, மீண்டும் வரும் தேர்தலில் படைக்க உள்ளோம்,'' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார். அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு

மூலக்கதை