ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாப பலி

தினமலர்  தினமலர்
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று (மார்ச் 18) நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்து 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இத்தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்று (மார்ச் 18) ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் வான் தாக்குதல் நடத்தியது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று (மார்ச் 18) நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் வடக்கு

மூலக்கதை