தி.மு.க., வேட்பாளர்களில் 11 புது முகங்கள்

தினமலர்  தினமலர்
தி.மு.க., வேட்பாளர்களில் 11 புது முகங்கள்

சென்னை லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும், 21 வேட்பாளர்களின் பட்டியலை, முதல்வர் ஸ்டாலின், சென்னை அறிவாலயத்தில் நேற்று அறிவித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, டி.ஆர்.பி. ராஜா, துணை பொதுச் செயலர்கள் பொன்முடி, ஆ.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் அறிக்கையை துணைப் பொதுச்செயலர் கனிமொழி வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் மேடையில் படித்தபோது, முக்கிய அம்சங்களை, கட்சி நிர்வாகிகள் கைத்தட்டி வரவேற்றனர்.

3 பெண்கள்பழைய வேட்பாளர்கள் செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாக சிலரும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டிய காரணத்திற்காக சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய வேட்பாளர்களாக, 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில் 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதில், 6 வழக்கறிஞர்கள், 2 டாக்டர்கள், 2 முனைவர்கள்.

மறைந்த தலைவர்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி மீது வழக்கு இருப்பதால் அவருக்கு போட்டியிட சீட் தரவில்லை.

ஆதரவு பின் எதிர்ப்புதேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு கொண்டிருந்தபோது, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அப்போது நிர்வாகிகள் கைதட்டவில்லை. மேடையில் இருந்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் மாற்றி கூறியதை சுட்டிக்காட்டியதும், பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரமாட்டோம் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வாய்ப்பு மறுப்புதென்காசி எம்.பி., தனுஷ்குமார், சேலம் எம்.பி., பார்த்திபன், தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, தஞ்சாவூர் எம்.பி., பழனி மாணிக்கம் ஆகிய, 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை

வேட்பாளர்கள் பட்டியலில் முஸ்லிம், கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் ஒருவர் கூட அறிவிக்கவில்லை. கடந்த தேர்தலில் திருநெல்வேலி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஞானதிரவியத்திற்கு இந்த முறை சீட்டு வழங்காமல், அத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், வேலுார் தொகுதியில், மீண்டும் போட்டியிடுகிறார். மற்றொரு மூத்த அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு, பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் அறிக்கை வெளியிடும் முன், பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து, மேடைக்கு சென்றார்.

********************


இப்போதைக்கு 16சென்னை :அ.தி.மு.க., சார்பில் நேற்று, 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விபரம்:

''நாங்கள் துணிச்சலாக தேர்தலை சந்திக்கிறோம். மக்கள் எங்களுக்கு முழுமையான ஆதரவு கொடுப்பர். 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல் கட்டமாக 16 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வின் முதல் வேட்பாளர் பட்டியலில் 16 பேர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்படும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும், எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., உடன் பேச்சு நடத்தவில்லை; நடத்தி இருந்தால் தெரிவித்திருப்பேன். தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.அ.தி.மு.க., சொந்தக் காலில் நிற்கிற கட்சி. கூட்டணிக்கு யாராவது வந்தால் வரவேற்போம்; வராவிட்டால் மகிழ்ச்சி. யாரையும் வற்புறுத்தி ஒரு கட்சியில் இணைக்க முடியாது.ஜெயலலிதா இருந்தபோது, 2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம்.

எங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர். மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது. தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் 38 பேர் இருந்தும், பார்லிமென்டில் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற, நிதியுதவி பெற அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு எந்த பயனும் கிடையாது. கடந்த 2014ல் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள், காவிரி பிரச்னைக்காக, 22 நாட்கள் பார்லிமென்டை ஒத்தி வைக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வைத்தனர். இம்முறை வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களைப் பெறுவோம். தமிழகத்தின் உரிமைகளை பெறுவோம். அது எங்கள் லட்சியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

@Image@

சென்னை லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும், 21 வேட்பாளர்களின் பட்டியலை, முதல்வர் ஸ்டாலின், சென்னை அறிவாலயத்தில் நேற்று அறிவித்தார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல், அடுத்த

மூலக்கதை