அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா

தினமலர்  தினமலர்
அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், அம்மன் வீதியுலா நடந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும் நடந்தது. மாலை 4:00 மணியளவில் அம்மன் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேர் வடம்பிடித்தனர்.

மாலை 5:00 மணிக்கு மயானக் கொள்ளை நடந்தது. நேற்று 15ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடந்தது. 21ம் தேதி இரவு 9:00 மணிக்கு கும்பம் படைத்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேர் திருவிழா நடந்தது.விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், அம்மன் வீதியுலா

மூலக்கதை