''ஒரு அடி தூரத்தில் 3ம் உலகப் போர்'': மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புடின் எச்சரிக்கை

  தினமலர்
ஒரு அடி தூரத்தில் 3ம் உலகப் போர்: மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற புடின் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: "அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில், 87 சதவீத ஓட்டுகளுடன் புடின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதிபர் அரியணையில் புடின் ஏறியிருக்கிறார். ஓட்டளித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு புடின் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும்.

ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை. மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

மாஸ்கோ: "அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் - ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என அதிபர் தேர்தலில்

மூலக்கதை