கடலூர் சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால்... விபத்து அபாயம்; பொதுப்பணித் துறையின் துரித நடவடிக்கை தேவை

தினமலர்  தினமலர்
கடலூர் சாலையில் சென்டர் மீடியன் இல்லாததால்... விபத்து அபாயம்; பொதுப்பணித் துறையின் துரித நடவடிக்கை தேவை


புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரியை, தமிழக கிழக்கு கடற்கரை மாவட்டங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்தச் சாலையில் தினமும் பல்வேறு தேவைகளுக்காக,புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு , அங்கிருந்து புதுச்சேரிக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி -கடலுார் சாலையில் விபத்துக்களை தடுக்க, மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம்,நோணாங்குப்பம் வரை சாலையின் நடுவில் மீடியன் பிளாக் எனப்படும் சிறிய சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டு திட்டாக...ஆனால், அதன் பிறகு இந்த சென்டர் மீடியன் முழுமையாக போடப்படவில்லை.

மாநில எல்லையான முள்ளோடை வரை சென்டர் மீடியனை நீட்டிக்காமல்,ஆங்காங்கே திட்டு திட்டாக அமைத்துள்ளனர்.இதனால் எந்த இடத்தில் சென்டர் மீடியன் உள்ளது.எங்கு இல்லை என தெரியாமல் வெளியூர் வாகன ஓட்டிகள் இரவில் தொடர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

உருக்குலைந்த பேரல்கள்சென்டர் மீடியன் இல்லாத இடங்களில் விபத்துகளை தடுக்க இரும்பு பேரல்கள் தடுப்புகளாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளன.இந்த பேரல்களின் எச்சரிக்கை வண்ணம் பூசப்படாத சூழ்நிலையில்,இரவில் வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றன.இரும்பு பேரல்கள் ஆங்காங்கே உருக்குலைந்துபோய் கிடக்கின்றது.

பலன் இல்லாத வெள்ளை கோடுஇதேபோல் சென்டர் மீடியன் இல்லாத இடங்களில் விபத்து நடக்காமல் வெள்ளை பூசி சாலையை இரண்டாக பிரித்துள்ளனர்.ஆனால் இந்த வெள்ளை கோட்டினை தாண்டி சாலையில் எதிரும் புதிருமாக வாகனங்கள் பறக்கின்றன.

இதன் காரணமாகவும் சென்டர் மீடியன் இல்லாத இடங்களில் கடலுார் சாலையில் உச்சக்கட்ட விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு எப்போதுகடலுார்-புதுச்சேரி சாலையில் அசுர வேகத்தில் பஸ்கள், கனரக வாகனங்கள் பறக்கின்ற சூழ்நிலையில், சென்டர் மீடியன் இல்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ள இரும்பு பேரல்கள்,வெள்ளை கோடுகள் ஏதும் பலன் அளிக்கவில்லை.

நோணாங்குப்பம் முதல் முள்ளோடை வரை சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.

போர்க்கால நடவடிக்கைபுதுச்சேரி-கடலுார் சாலையில் மொத்தம் 17 கி.மீ.,தொலைவிற்கு சென்டர் மீடியன் அமைக்க பொதுப்பணித் துறையின் நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.

ஆனால் 3 கி.மீ., தொலைவிற்கு மட்டுமே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து 3 கி.மீ.,தொலைவிற்கு சென்டர் மீடியன் அமைக்க பொதுப்பணித் துறை டெண்டர்விட நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் பணிகள் கிடப்பில் போட்டுள்ளது.

கடலுார் சாலையில் சென்டர் மீடியன் இல்லாத இடங்களில் நொடிக்கு நொடி விபத்து அபாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்நோணாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை சென்டர் மீடியன் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பகுதிகளில் தேவையற்ற இடைவெளிகள் விடப்பட்டுள்ளன.இதன் காரணமாக கடலுார் சாலை உச்சக்கட்ட விபத்து அபாயம் மிகுந்த சாலையாக உருவெடுத்துள்ளது.இந்த இடைவெளிகள் வழியாக திடீரென புகும் வாகனங்களால் கடலுார் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.எனவே தேவையற்ற இடங்களில் உள்ள இடைவெளியை நிரந்தரமாக மூட வேண்டும்.புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரியை, தமிழக கிழக்கு கடற்கரை மாவட்டங்களுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்தச் சாலையில் தினமும் பல்வேறு

மூலக்கதை