பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

தினமலர்  தினமலர்
பழநி முருகன் கோயிலில் உழவாரப்பணி

பழநி: பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி துவங்கியது.

பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி மார்ச் 16,17 என இரு நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று 3000 க்கு மேற்பட்ட சிவனடியார்கள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பழநி கோயிலுக்கு வருகை புரிந்தனர்.இப்பணியை கோயில் அறங்காவலர்கள் துவங்கி வைத்தனர்.

நேற்று பாத விநாயகர் கோயில்,அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கிரி வீதி சுற்றுக்கோயில்களில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பழநி மலை மீது உள்ள பிளாஸ்டிக் குப்பை,தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர். உழவாரப் பணிகள் இன்றும் தொடர்கிறது.

பழநி: பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி துவங்கியது.பழநி முருகன் கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி மார்ச் 16,17 என இரு

மூலக்கதை