ராமநாதபுரத்தை மாநகராட்சியாகும் திட்டம்: ஊராட்சிகளை இணைக்க மக்கள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
ராமநாதபுரத்தை மாநகராட்சியாகும் திட்டம்: ஊராட்சிகளை இணைக்க மக்கள் கோரிக்கை

2017ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தையொட்டியுள்ள பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை, சூரன்கோட்டை ஊராட்சிப்பகுதிகளை இணைத்து விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் அறிவித்தார்.

இதனையடுத்து ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது. அதற்கேற்றார்போல் விரிவாக்க நடவடிக்கையோ, சிறப்பு நிதியோ, கூடுதல் ஊழியர்களோ நியமிக்கப்படவில்லை 33 வார்டுகள் தான் இன்னும் உள்ளன.

ராமநாதபுரம் நகராட்சியினை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும், என சட்டசபையில் 2023 ஏப்.,ல் அமைச்சர் நேரு தெரிவித்தார்.

அதன்பிறகு பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரங்கோட்டை, பேராவூர், ஆர்.எஸ்.மடை, அச்சுந்தன்வயன், புத்தேந்தல் ஆகிய ஊராட்சிகளை இணைந்து 10 கி.மீ., சுற்றளவில் 60 வார்டுகள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு அதனை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் விட்டுள்ளனர்.

எனவே 2024ம் ஆண்டிலாவது ராமநாதபுரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

2017ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி ராமநாதபுரத்தையொட்டியுள்ள பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரக்கோட்டை, சூரன்கோட்டை ஊராட்சிப்பகுதிகளை இணைத்து விரிவாக்கத்திற்கு நடவடிக்கை

மூலக்கதை