தேர்தல் நடத்தை விதிகள் அமல் அரசு விளம்பர படங்கள் அகற்றம்

தினமலர்  தினமலர்
தேர்தல் நடத்தை விதிகள் அமல் அரசு விளம்பர படங்கள் அகற்றம்

விழுப்புரம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள விளம்பர படங்கள் அகற்றப்பட்டன.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள், நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே பயணிகள் நிழற்குடையில் இருந்த அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பர பதாகைகள், முதல்வர், அமைச்சர்களின் விளம்பர பேனர்களையும், கட்சி விளம்பர பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

விழுப்புரம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள விளம்பர படங்கள் அகற்றப்பட்டன.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து

மூலக்கதை