'இஸ்லாமோபோபியா' தீர்மானம் ஐ.நா.,வில் இந்தியா எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
இஸ்லாமோபோபியா தீர்மானம் ஐ.நா.,வில் இந்தியா எதிர்ப்புநியூயார்க் : 'இஸ்லாமோபோபியா' எனப்படும் இஸ்லாத்துக்கு எதிரான மனநிலை தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதற்கு, ஐ.நா., சபையில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மீதான ஓட்டெடுப்பை புறக்கணித்தது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் சார்பில், ஐ.நா., பொது சபையில் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சீனா ஆதரவு அளித்துஉள்ளது.

இஸ்லாமோபோபியா எனப்படும் இஸ்லாத்துக்கு எதிரான மனநிலைக்கு எதிராக ஒன்று திரண்டு செயல்பட வேண்டும் என, அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மீது நடந்த ஓட்டெடுப்பில், 115 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், இந்தியா, பிரேசில், இத்தாலி, உக்ரைன், பிரிட்டன் உட்பட, 44 நாடுகள் ஓட்டெடுப்பை புறக்கணித்தன.

இதன் மீதான விவாதத்தின்போது, ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறியுள்ளதாவது:

ஐ.நா., என்பது, மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். இதுபோன்ற மதம் தொடர்பான தீர்மானங்கள் நம்மை ஒற்றுமையாக இருப்பதை விட பிரித்துவிடும் ஆபத்து உள்ளது.

இஸ்லாத்துக்கு எதிராக இதுபோன்ற தீர்மானம் கொண்டு வரும்போது, ஹிந்து, கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியருக்கு எதிராக உள்ள பேதங்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். போபியா எனப்படும் பய நோய், இந்த நாடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

அதனால்தான், இஸ்லாத்துக்கு எதிராக பேதம் இருப்பதாக பொய்யான மனநிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூயார்க் : 'இஸ்லாமோபோபியா' எனப்படும் இஸ்லாத்துக்கு எதிரான மனநிலை தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதற்கு, ஐ.நா., சபையில் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மீதான

மூலக்கதை