மானாமதுரையில் மீண்டும் பனை மர பொருள் தயாரிப்பு

தினமலர்  தினமலர்
மானாமதுரையில் மீண்டும் பனை மர பொருள் தயாரிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சார்பில் பனந்துாரிகை தொழில் நுட்ப பணிக்கூடம் புதிதாக சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இங்கு பனங்குருத்தோலைகளில் பழமை மாறாமல் பாரம்பரிய பொருட்களான பனை ஓலைவிசிறி, குழந்தைகள்விளையாடும் கிளுகிளுப்பான், கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு போன்ற இனிப்பு பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக்கூடிய பனை ஓலை பெட்டிகள், பனை ஓலை தொப்பிகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பொருட்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து ஊர்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது அதனை மீட்டெடுக்கும் விதமாக மானாமதுரையில் பனங்குருத்தோலைகளை கொண்டு பழமையான பொருட்களை பழமை மாறாமல் தயாரித்து வருவதால் அப்பொருட்களுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது.

பனை மரங்கள் அதிகமுள்ள ராமநாதபுரம், சாயல்குடி, முதுகுளத்தூர்மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏராளமான ஊர்களிலிருந்து பனங் குருத்தோலை வரவழைக்கப்பட்டு இங்குஉள்ள தொழில்நுட்ப கூடத்தில் உள்ள பெண்கள் இதுபோன்ற பழமையான கலை நயமிக்க பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.

பனை தொழில்நுட்பக் கூட திட்ட இயக்குனர் மாரியப்பன் கூறியதாவது:

பனங்குருத்தோலையை மொத்தமாக கொள்முதல்செய்து ஒரு பனங்குருத்தோலை ரூ.40க்கு விற்பனை செய்கிறோம். இதிலிருந்து அவர்கள் ஏராளமான பொருட்களை தயார் செய்து மீண்டும் எங்களிடமே விற்பனை செய்கின்றனர்.

அதனை நாங்கள் தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விற்பனையகத்தில் விற்பனை செய்து வருகிறோம்.

மேலும் பனையில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கற்கண்டு, பனம் பழ ஜூஸ், பதநீர், பனங்கிழங்கு மாவு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் இதனோடு சேர்த்து விற்பனை செய்து வருகிறோம்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சார்பில் பனந்துாரிகை தொழில் நுட்ப

மூலக்கதை