ராமாயண் படத்திலிருந்து வெளியேறிய சாய்பல்லவி ?

தினமலர்  தினமலர்
ராமாயண் படத்திலிருந்து வெளியேறிய சாய்பல்லவி ?

சமீபகாலமாக புராண இதிகாச படங்களை மையப்படுத்தி முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் ஆதிபுருஷ், ஹனுமான் போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயண கதையை தழுவி ராமாயண் என்கிற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் பணிகள் துவங்க தாமதமாகி வருவதால் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுப்பதில் பிரச்னை ஏற்படுவதாக கூறி நடிகை சாய்பல்லவி இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் சாய்பல்லவி தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்களாம்.

மூலக்கதை