இலங்கையில் நேர்ந்த சங்கடம் : சந்தோஷி வேதனை

தினமலர்  தினமலர்
இலங்கையில் நேர்ந்த சங்கடம் : சந்தோஷி வேதனை

தமிழில் பாபா, மிலிட்டரி, பாலா உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் ருத்ரவீணை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் சந்தோஷி. திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு மேக்கப், பேஷன் போன்ற பிசினஸ்களில் பிசியாகிவிட்டார். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று மேக்கப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் சந்தோஷி, அண்மையில் இலங்கையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். இலங்கை பயிற்சி வகுப்பின் போது பரிமாறப்பட்ட உணவுகளில் அசைவ உணவு மட்டுமே இருந்ததாகவும், சைவம் சாப்பிடும் சந்தோஷிக்கு வேறு உணவை ஏற்பாடு செய்யாமல் வெறும் ஜூஸை மட்டுமே நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கியதாகவும் சந்தோஷி கூறியுள்ளார். மேலும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் முறைப்படி சாப்பாடு வழங்கமால் சாப்பாடு பொட்டலங்களை வழங்கியதாகவும் அதையும் மிக தாமதமாகவே ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதை அந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்திருந்த சந்தோஷி தனது நிகழ்ச்சியில் இப்படி நடந்தது தனக்கு மிகவும் அசிங்கமாகவும் வேதனையாகவும் இருப்பதாக கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை