மாமனார் தயாரிப்பில் மருமகன் : இறுதிக் கட்டத்தில் ஆகாஷ் முரளி படம்

தினமலர்  தினமலர்
மாமனார் தயாரிப்பில் மருமகன் : இறுதிக் கட்டத்தில் ஆகாஷ் முரளி படம்

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா தற்போது பிசியாக நடித்து வருகிறார். அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி. இவர் பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை திருமணம் செய்தார். சினேகா, நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர். தற்போது சேவியர் பிரிட்டோ தன் மருமகனை சினிமாவில் அறிமுகப்படுத்த படம் தயாரிக்கிறார். இந்த படத்தை அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இவர் இயக்கிய பாலிவுட் படமான 'ஷெர்சா' அங்கு வெற்றி பெற்றது அடுத்து சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

அதற்கு இடையில் இந்த படத்தை இயக்கி வருகிறார். ரொமாண்டிக் த்ரில்லர் வகையிலான படத்தில் ஆகாஷ் முரளி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

மூலக்கதை