போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஸ்வயம் சித்தா தாஸ்

தினமலர்  தினமலர்
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஸ்வயம் சித்தா தாஸ்

'ஆட்டோ சங்கர்' வெப் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வயம் சித்தா தாஸ். தற்போது அவர் நடித்து வரும் படம் 'அக்காலி'. பிபிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.உகேஷ்வரன் தயாரிக்கிறார். புதுமுகம் ஜெயக்குமார் நாயகனாக நடிக்கிறார். வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிரி மர்பி ஒளிப்பதிவு செய்ய, அனிஷ் மோகன் இசை அமைத்துள்ளார்.

முகமது ஆசிப் ஹமீத் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது “அக்காலி என்பதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள். அப்படி ஒரு சிலர் இருப்பதாக நம்பப்படுகிறது. அதையே கதையின் மூலக் கருவாக வைத்து இந்த படம் உருவாகிறது. இது ஒரு திரில்லர் படம்.. சென்னையிலுள்ள பொழிச்சலூர் காட்டுப்பகுதியில் பாழடைந்த பங்களா செட் அமைத்து படமாக்கினோம். இந்த அரங்கை தோட்டா தரணி மிகவும் வித்தியாசமாக அமைத்து தந்தார். அங்கு 2 வாரங்கள் கிளைமாக்ஸ் படமானது. ஸ்வயம் சித்தா தாஸ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் கையாளும் ஒரு வழக்குதான் படத்தின் கதையாகும். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது” என்றார்.

மூலக்கதை