விவசாய சங்கங்கள் பேரணி: டில்லியில் பலத்த பாதுகாப்பு

தினமலர்  தினமலர்
விவசாய சங்கங்கள் பேரணி: டில்லியில் பலத்த பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சண்டிகர்: நாடு முழுதும் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து டில்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஹரியானா மற்றும் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு அதிக இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை விவசாய அமைப்பினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து டில்லியை நோக்கி இன்று பேரணி செல்ல இருப்பதாக அறிவித்துள்ளன. இதில், 2,000க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பேரணியை தலைநகர் டில்லிக்குள் நுழைய விடாமல் ஹரியானா எல்லையிலேயே தடுக்கும் நோக்கில், பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் மணல் மூட்டைகள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் இயந்திரகளை கொண்டு தடுத்து நிறுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து பஞ்சாப், ஹரியானா, டில்லி, உ.பி., உட்பட மாநில எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரணியின் போது வன்முறை ஏற்பட்டால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

விவசாயிகளின் பேரணியால் டில்லி - சண்டிகர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், மாற்று பாதையில் செல்லுமாறு வாகனஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

விவசாயிகளின் பேரணியின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு, அங்குள்ள ஏழு மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர்: நாடு முழுதும் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து டில்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஹரியானா மற்றும் டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

மூலக்கதை