வினோத் - தனுஷ் கூட்டணி உறுதி ?

தினமலர்  தினமலர்
வினோத்  தனுஷ் கூட்டணி உறுதி ?

“சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு” ஆகிய படங்களை இயக்கிய வினோத் அடுத்ததாக கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்க இருந்தார். கடந்த ஜுலை மாதம் 'ரைஸ் டூ ரூல்' என்ற தலைப்பில் அப்படத்திற்கான சிறு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்கள். ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக இப்படம் நடக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள்தான் வெளியானது. அப்படத்தை இயக்குவதிலிருந்து வினோத் விலகவே வாய்ப்புகள் அதிகம் என்றார்கள்.

இதனால், வேறு ஹீரோக்களை வைத்து படம் இயக்க வினோத் முயன்று வந்தார். கார்த்தி, யோகி பாபு என சொல்லப்பட்ட நிலையில் தனுஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. தனுஷ் சம்பளம் குறித்துதான் பேச்சுவார்த்தை இழுபறி ஆனதாகவும் சொன்னார்கள். இந்நிலையில் இதுவரையில் வாங்காத அளவிற்கு அதிகபட்ச சம்பளத்தைத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தர முடிவாகி உள்ளதாம். இதர சில விஷயங்கள் பேசி முடிக்கப்பட்ட பின் விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

தனுஷ் தற்போது அவரது 51வது படமாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின் வினோத் இயக்கத்தில் தனுஷின் 52வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம்.

மூலக்கதை