" தி.மு.க., பொய் சொல்கிறது " - ஜெ.பி. நட்டா தாக்கு

தினமலர்  தினமலர்
 தி.மு.க., பொய் சொல்கிறது   ஜெ.பி. நட்டா தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: ''தி.மு.க., அரசின் செயல்பாடுகள், எமர்ஜென்சியை நினைவுபடுத்து கின்றன. தி.மு.க.,வை மக்கள் துாக்கி எறியும் காலம் வந்து விட்டது,'' என, பா.ஜ., தேசியதலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.

தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, 'என் மண்; என் மக்கள்' யாத்திரை, 200வது தொகுதியாக நேற்று சென்னைதுறைமுகம் தொகுதியில் நடந்தது.

அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:

தேசிய வளர்ச்சி குறித்து பேசும் போது, தமிழகத்தின் பங்கை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பிரதமர் மோடியின் இதயத்திற்கு நெருக்கமானதாக தமிழகம் உள்ளது. அவர் எங்கு சென்றாலும், தமிழகத்தின் இலக்கியங்களை சுட்டிக் காட்டுகிறார்.

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவுக்கு உணவு பாதுகாப்பை அளித்தார். இன்று உணவு உற்பத்தியில் நாடுதன்னிறைவு பெற்றுள்ளதுடன், வெளிநாடுகளுக்கு வழங்குகிறோம்.

தமிழகம் மிகச் சிறந்த கலாசாரம், பாரம்பரியம், பழமையான மொழி போன்றவற்றை தன்னகத்தே கொண்டது. ஆன்மிகத்திற்கு தமிழகம் அளித்துள்ள பங்கையும் மறக்க முடியாது.

ஆனால், இன்றுதமிழகம் மோசமான தலைவரால் ஆளப்படுகிறது. தமிழக மக்கள் கடுமையான உழைப்பாளிகள்; நாட்டுக்குவிசுவாசமாக உள்ளனர்.

துாக்கி எறியும் காலம்


மோசமானது. தி.மு.க., தலைமைக்கு ஞானம் இல்லை. ஜனநாயகத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இல்லை. நான் வரும் போது, தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன; கடைகள் மூடப்பட்டிருந்தன; போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த காட்சிகள், எமர்ஜென்சி காலமான நெருக்கடி நிலையை நினைவுபடுத்துகின்றன.

2 ம் இடத்தில் இரும்பு உற்பத்தி


மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், உலகப் பொருளாதாரத்தில் நம் நாடு ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. நம்மை ஆண்ட பிரிட்டனை முந்தி வந்துள்ளோம். பா.ஜ.,வுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது, நம் நாடு ஆட்டோ மொபைல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது. முன்பெல்லாம் மொபைல் போன்களில், 92 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டன; இன்று 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இரும்பு உற்பத்தியில், இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளோம்.

தமிழகம் புறக்கணிப்பா இல்லை ?


அனைத்துக்கும் மேலாக, 500 ஆண்டுகளுக்கு மேலாக தீராமல் இருந்த ராமஜென்ம பூமி பிரச்னை தீர்க்கப்பட்டு, ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, நாட்டில் பிரிக்கப்படாத பகுதியாக காஷ்மீரை மாற்றி உள்ளோம்.அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், மோடிக்கு ஆதரவு தர வேண்டும். 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும். தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க., பொய் சொல்கிறது.

சென்னை: ''தி.மு.க., அரசின் செயல்பாடுகள், எமர்ஜென்சியை நினைவுபடுத்து கின்றன. தி.மு.க.,வை மக்கள் துாக்கி எறியும் காலம் வந்து விட்டது,'' என, பா.ஜ., தேசியதலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.தமிழக

மூலக்கதை