திட்டப் பணிகளுக்கான அரசு நிதி வீண்: அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆதாயம்

தினமலர்  தினமலர்
திட்டப் பணிகளுக்கான அரசு நிதி வீண்: அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆதாயம்

மத்திய மாநில அரசுகளின் ஒதுக்கீடு மூலம் பல்வேறு திட்டங்களில் மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடிநீர், தெருவிளக்கு, ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் மட்டுமின்றி நீர்நிலை மேம்பாடு எதிர்கால தேவைக்கான திட்டங்கள் போன்றவற்றிற்கும் இவற்றில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில், 305 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மாவட்ட கவுன்சில் ஒன்றிய கவுன்சில் கிராம ஊராட்சி என மூன்றடுக்கு நிர்வாகங்கள் மூலம் திட்டப் பணிகளுக்கான ஒதுக்கீடு உள்ளது.

தற்போதைய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தபோது, வளர்ச்சித் துறையை அமைச்சர் பெரிய கருப்பன் கவனித்து வந்தார்.

தி.மு.க., ஆட்சி துவக்க காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெருமளவு திட்டப் பணிகளில், அதிக முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வெளிவர துவங்கியுள்ளன.

பெரும்பாலான உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பினாமி பெயர்களில் ஒப்பந்ததாரர்களாக மாறி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவற்றை கண்காணிக்க வேண்டிய ஒன்றிய பொறியியல் துறையில் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்வதை தவிர்க்கின்றனர்.

மாறாக குறைந்த சம்பளத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள், இதற்கான ஆவணங்களை தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பணிகள் குறித்த முழுமையான தகவல் அறியாதவர்களாக,ஒப்பந்ததாரர்களுக்கான செலவின தொகையை அங்கீகரித்து வழங்கும் அவல நிலையில் பல ஒன்றிய பொறியாளர்கள் ஈடுபட்டனர். இதை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்களும், கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங், கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி அலுவலகம் வருவதை தவிர்ப்பது, கள ஆய்வை புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நீர்நிலை மேம்பாடு சார்ந்த திட்டங்களில் வண்டிப்பாதை கண்மாய்களில் தடுப்பணை அமைத்தது, நீர் நிரம்பிய கண்மாய்க்குள் ஆழ்துளை கிணறு ஆழப்படுத்தியது போன்ற ஏராளமான முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. இதன்மீது மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் ஒதுக்கீடு மூலம் பல்வேறு திட்டங்களில் மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடிநீர், தெருவிளக்கு, ரோடு, சாக்கடை போன்ற

மூலக்கதை