'பைரி' படத்தில் 35 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்

தினமலர்  தினமலர்
பைரி படத்தில் 35 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்

டி.கே புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.துரைராஜ் தயாரித்துள்ள படம் பைரி. ஜான் கிளாடி இயக்கி உள்ளார். சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் ஜான் கிளாடி பேசியதாவது:

'பைரி' என்பது புறாக்களை வானத்திலேயே வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம். நாகர்கோவில் பகுதியில் நடக்கும் புறா பந்தையங்களின் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. படத்தின் நாயகன் புறாக்களை வளர்த்து பந்தையத்துக்கு விடுகிறவன். இதனால் அவன் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறான். அதனை அவன் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் அம்மா, மகன் சென்டிமெண்டும், காதலும் இருக்கிறது.

படத்தில் 300 புறாக்களை பயன்படுத்தி இருக்கிறோம். அதோடு 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன, 4 நிமிடத்திற்கு 75 லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் சிஜி சேகர் 35 நிமிடத்திற்கு சிஜி ஷாட்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறரர். படப்பிடிப்பில் புறாக்களை பயன்படுத்த விலங்கு நல வாரியத்திடமும், மாவட்ட வன அலுவலரிடமும் முறையான அனுமதி பெற்றோம் என்றார்.

மூலக்கதை