சமையல் கலையில் அசத்தும் பெண்களா நீங்கள்; தினமலர் 'மில்லட் மகாராணி' போட்டிக்கு தயாரா
மதுரை : சமையல் கலையில் அசத்தும் பெண்களுக்காக தினமலர், ஆசீர்வாத் மில்லட்ஸ் இணைந்து வழங்கும் 'மில்லட் ராணி' பட்டத்திற்கான போட்டிகள், மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் பிப்., 25 காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
சமையலில் சாதிக்கும் பெண்களை வெளிக்கொண்டு வரும் வகையிலும், சமையலின் ஆரோக்கிய மந்திரத்தை பயனுள்ள வகையில் பிறருக்கு பகிரும் முயற்சியாகவும் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கும் பெண்கள் 'மில்லட் ராணி' பட்டம் வெல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் தங்கள் வீட்டிலேயே சிறுதானியங்களில் டிரெண்டியான, டேஸ்ட்டான டிஷ் செய்து கொண்டு வரவேண்டும். நீங்கள் தயாரித்த டிஷ்களை சுவைத்து பார்த்து பிரபல ெஷப் தாமு சிறந்த டிஷ்ஷிற்கான முடிவை அறிவிப்பார்.
வெற்றி பெறுபவர் 'மில்லட் ராணி'யாக தேர்வு செய்யப்படுவார். 'மில்லட் ராணி'க்கு பட்டம் மட்டுமின்றி பிரமிக்க வைக்கும் பரிசுகளும் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் நான்கு சுவற்றுக்குள் சமையலில் அசத்தும் பெண்களே வாருங்கள் உங்களுக்காக 'மில்லட் மகாராணி' பட்டம் தயாராக உள்ளது.
போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இன்றே 96777 60856 என்ற எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி.
சிறுதானியங்கள் நிறைந்த ஆசிர்வாத் மில்லட் மாவு வகைகளில் சமைத்து எடுத்து வரும் பெண்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அனுமதி இலவசம்.
இந்நிகழ்ச்சியை 'மஹன்யாஸ் மகளிர் மனதில்' இணைந்து வழங்குகிறது. சமையலில் சாதித்துக் காட்ட நல்ல வாய்ப்பு காத்திருக்கு... தயாராகுங்கள் பெண்களே.
மதுரை : சமையல் கலையில் அசத்தும் பெண்களுக்காக தினமலர், ஆசீர்வாத் மில்லட்ஸ் இணைந்து வழங்கும் 'மில்லட் ராணி' பட்டத்திற்கான போட்டிகள், மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் பிப்., 25