அரசின் கடன் குறைந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: சக்திகாந்த தாஸ்

தினமலர்  தினமலர்
அரசின் கடன் குறைந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: சக்திகாந்த தாஸ்

புதுடில்லி: அரசு, குறைந்த அளவில் கடன் வாங்குவது, தனியார் துறையில் மூலதனம் அதிகரிக்கவும், அதன் விளைவாக பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி அதிகரிக்கவும் உதவும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் இடைக்கால பட்ஜெட்டில், 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க முன்மொழிந்துள்ளார். இது கடந்த ஆண்டின் மொத்தக் கடன் மதிப்பீடான, 15.43 லட்சம் கோடி ரூபாயை விட குறைவாகும்.

மேலும் இந்த ஆண்டு எதிர்பார்த்த கடன் அளவை விடவும் குறைவு. அரசு குறைந்த அளவில் கடன் வாங்குவது, வங்கி அமைப்பில் கூடுதல் நிதி கிடைப்பதை உறுதி செய்யும். இது தனியார் துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு, வளர்ச்சியை தூண்டுவதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லி: அரசு, குறைந்த அளவில் கடன் வாங்குவது, தனியார் துறையில் மூலதனம் அதிகரிக்கவும், அதன் விளைவாக பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி அதிகரிக்கவும் உதவும் என, ரிசர்வ் வங்கி கவர்னர்

மூலக்கதை