இலவச வேட்டி, சேலை ஊழல்; லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

  தினமலர்
இலவச வேட்டி, சேலை ஊழல்; லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

சென்னை: 'தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்தும், அமைச்சர் காந்தியின் தலையீடு குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு துறையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

சென்னை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், அண்ணாமலை சார்பில் அளிக்கப்பட்ட மனு:


பொங்கலுக்கு தலா, 1.68 கோடி வேட்டி, சேலைகள் தயாரிக்க, தி.மு.க., அரசு உத்தரவு பிறப்பித்தது. இலவச வேட்டி, சேலை தயாரிப்பில், ஜவுளி துறையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்கும், மக்களுக்கு வழங்கப்பட்ட துணிகளின் தரத்திற்கும் சம்பந்தமில்லை.

மக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 22 சதவீதம் மட்டுமே பருத்தி, 68 சதவீதம், 'வார்ப் பாலியஸ்டர்' இருப்பது கண்டறியப்பட்டது. அமைச்சர் காந்தியின் கருத்து, வேட்டி தயாரிக்கப்பட வேண்டிய விதிகளுக்கு முரண்பாடாக உள்ளது.

சென்னை: 'தமிழக கைத்தறி மற்றும் துணிநுால் துறையில் நடந்துள்ள ஊழல் குறித்தும், அமைச்சர் காந்தியின் தலையீடு குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு துறையில், தமிழக பா.ஜ., தலைவர்

மூலக்கதை