பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம்

துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர் திறந்து வைக்கிறார்.

முன்னதாக, அங்குள்ள சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

'அஹலான் மோடி' அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான புருஷோத்தமன் கூறுகையில், ''நேற்று முன்தினம் இரவு முதல் அபுதாபியில் விடிய விடிய கனமழை கொட்டியது; கடந்த சில நாட்களாக பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது.

''இதனால் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 60,000 பேருக்கு பதிலாக 35,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

துபாய்: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர்

மூலக்கதை