பேச்சு பேட்டி அறிக்கை: 'இதுக்கு போய் சாபம் தரலாமா?'

தினமலர்  தினமலர்
பேச்சு பேட்டி அறிக்கை: இதுக்கு போய் சாபம் தரலாமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

சென்னை கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, கல்லுாரி முதல்வரே, தி.மு.க., நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலும், மாணவ - மாணவியரை அழைத்துச் செல்ல, மாநகர பஸ்களை பயன்படுத்துவது, தி.மு.க.,வினரின் அராஜகத்தை காட்டுகிறது. தமிழக மக்கள், லோக்சபா தேர்தலில் இதற்கு தக்க பாடம் புகட்டுவர்.

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

மேற்கு வங்கத்தில் சிறைகளில் உள்ள பல பெண் கைதிகள் கர்ப்பமடைகின்றனர். தற்போது சிறைகளில், 196 குழந்தைகள்பிறந்து வளர்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பெண் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில், இந்த கொடூரம் நடப்பது, மாநிலத்தின் சீர்கேட்டை உணர்த்துகிறது. இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனசாட்சி இருந்தால், இதற்கு பொறுப்பேற்று மம்தா அரசியலில் இருந்து விலக வேண்டும்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகு ராஜ் அறிக்கை:

மூன்றாவது முறையாக மோடியே நாடாள வேண்டும் என்ற தேசம் தழுவிய கருத்தும், தி.மு.க., ஆட்சிக்கு எதிராக அலைவீசும் கோபமும், 1998ஐ போன்று 30 தொகுதிகளில் வாகை சூடும் வாய்ப்பை, பா.ஜ., கூட்டணிக்கு தமிழகம் தர காத்திருக்கிறது.

போனா போகுதுன்னு பாக்கி இருக்கிற 10 தொகுதியை அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு விட்டுட்டாரோ?

தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை:

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தின் நிறைவு மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதன் வாயிலாக, தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கும். மோடிக்கு, 375 தொகுதிகள் தான் இலக்கு என்றால், 400 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு லட்சியம். ஆனால், தே.ஜ., கூட்டணிக்கு, 450 தொகுதிகள் நிச்சயம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: சென்னை கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, கல்லுாரி முதல்வரே, தி.மு.க., நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டாயப்படுத்தி

மூலக்கதை